மேலும் அறிய

’மின்வெட்டு என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

"மின் வெட்டு என பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். பாதிப்பு உள்ள பகுதியை தெரிவித்தால் உடனடியாக மின்சாரம் வினியோகம் அளிக்கப்படும்‌."

கோவை உக்கடம் அருகேயுள்ள வாலாங்குளத்தில் வடிகால் அமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். மேலும் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் இராஜ கோபால் சுன்காரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து கோவை இரயில் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.  ஆய்வுக்கு  பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் 27 குளங்களில் 26 குளங்கள் நிரம்பி உள்ளது. மீதமுள்ள ஒரு குளம் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. மழையின் அளவு அதிகளவில் பெய்துள்ளது. வாலாங்குளம் நிரம்பிச் செல்லும் போது, நீர் செல்லும் பாதை குறுகலாக உள்ளது. அது சரி செய்யப்படும்.


’மின்வெட்டு என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

31 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 7 பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிப்பு இல்லாத அளவில் மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு என பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். பாதிப்பு உள்ள பகுதியை தெரிவித்தால் உடனடியாக மின்சாரம் வினியோகம் அளிக்கப்படும்‌.

150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களை பெற்றுள்ளோம். விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள பணி செய்து வருகிறோம். கோவை மாநகராட்சியில் சாலைகள் மிக மோசமாக உள்ளது. சிறப்பு நிதிகளை பெற்று சாலைகளை மேற்க்கொள்ள இருக்கிறோம். வட கிழக்கு பருவ மழைக்கு அனைத்து துறைகளுடன் ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.


’மின்வெட்டு என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து சுங்கம் பகுதியில் சூப்பர் சக்கரா வாகனம் மூலம் கழிவு நீர் அகற்றும்  பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். பின்னர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 85 வது நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள திருவருவ சிலை மற்றும் அவர் இழுத்த செக்கிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget