மேலும் அறிய

'இஸ்ரேலில் இருந்து இதுவரை 132 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

”தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் 120 பேருக்கு விமான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 12 பேர் சொந்த செலவில் திரும்பி உள்ளனர்”

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து அங்கிருக்கும் தமிழர்களை அழைத்து வருகின்றது. அதன்படி இன்று கோவை விமான நிலையத்திற்கு 4 பேர் அழைத்து வரபட்டனர். அவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “இஸ்ரேலில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். இன்றைய தினம் கோவைக்கு 4 பேர் வந்துள்ளனர். இதுவரை கோவை விமான நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 25 பேர் வந்தடைந்துள்ளார்கள். மேலும் அங்கிருந்து தொடர்பு கொள்பவர்களை அழைத்து வந்து அவர்களது இல்லம் வரையிலும் கொண்டு போய் சேர்க்கின்ற பணியை முதலமைச்சரின் உத்தரவின்படி துறை சார்ந்த அதிகாரிகளும், நானும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வரவேற்று அவர்களை இல்லத்தில் கொண்டு சேர்க்கின்ற பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். சிலரை நாங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். பிற நாட்டவர்கள் எங்களுடன் இருந்து அவர்களின் நாட்டிற்கு செல்லும் பொழுது எங்களுக்கும் அச்சம் ஏற்படுகிறது. தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம் என அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலில் இருந்து இதுவரை 132 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் 120 பேருக்கு விமான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 12 பேர் சொந்த செலவில் திரும்பி உள்ளனர். மேலும் அங்கு இருப்பவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் நாம் அவர்களை அழைக்கிறோம். அவர்களை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிருக்க கூடிய உறவினர்கள் தேவைப்படுகின்ற பட்சத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களின் விவரம் பெரும்பாலும் பதிவில்லாமல் இருக்கிறது. அதனால் தான் அயலக தமிழக வாரியத்தை வைத்து பதிவு செய்து செல்லும் நிலையை உருவாக்கியுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் எத்தனை பேர் உள்ளார்கள் என்ற விவரங்களை அறியக்கூடும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் இஸ்ரேலில் இருந்து திரும்பிய வசீம் என்ற மாணவர் கூறுகையில், ”இஸ்ரேலில் இருந்த எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டது. வெளிநாடு தமிழர்கள் அமைப்புகள் எங்களை பத்திரமாக அழைத்து வந்தனர். அங்கு தற்போதும் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனிமேல் தான் தங்களுக்கு பிரச்சனை வரும் என எண்ணம் தோன்றியது. அதனால் தான் அங்கிருந்து கிளம்பி வந்துள்ளோம். நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்து கொண்டே இருந்ததால் தான், கிளம்ப வேண்டிய தேவை உருவானது. அங்கு ஒவ்வொரு இடத்திற்கும் உள்ள பாதுகாப்பு அறிகுறிகள் மாறும். நாங்கள் அங்கு விமான நிலையத்தில் இருக்கும் போதும் மிசேல் வெடித்தது. உடனடியாக நாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டோம். பதற்றமான சூழல் இஸ்ரேல் பக்கம் இல்லை. பாலஸ்தீனம் பக்கம் தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget