மேலும் அறிய

Lok Sabha Election: ’கோவையில் பாஜக தேசிய தலைவரே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

”எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில் திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார்”

கோவை காளப்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திராவிட மாடல் ஆட்சி:

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா, “தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மின்னிக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு இந்திய மக்களிடம் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி மகத்தான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற வேண்டும் என்ற முயற்சியில் ஒற்றுமொத்த கூட்டணி கட்சிகளும் முயற்சிமேற்கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றிக்கு வழி சேர்க்கும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா கூட்டணியில் வேட்பாளர் மகத்தான வெற்றியை தருவார் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிந்து இருக்கிறது. எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். முதல்வரின் ஆட்சியை இந்தியாவே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு நபரும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை கண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பார் அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை தமிழக மக்கள் கண்டிருக்கிறார்கள். எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில் திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார். பாஜகவின் தேசிய தலைவரே இங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள்.

Lok Sabha Election: ’கோவையில் பாஜக தேசிய தலைவரே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

இதனை சாதாரண ஒரு தேர்தலாக பார்க்க கூடாது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று வருகிற எதிரணியை வீழ்த்த தமிழினமே துடிக்கிறதே தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநிலத்தை எவ்வளவு புறக்கணித்து வருகிறார்கள். எதை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்பார்கள். மத ரீதியாகவும் ஜாதிய ரீதியாகவும் பிளவுபடுத்துவதை தவிர வேறு என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள்.

இந்த வளர்ச்சியை இந்த பகுதிக்கு கொடுத்து இருக்கிறேன் என்று எதைச் சொல்லி ஓட்டு கேட்பார்கள்? ஆனால் திமுகவினர் மகளிர் உதவித்தொகை, நான் முதல்வன் என்ற மகத்தான திட்டத்தையும், காலை உணவு திட்டத்தையும், கோவைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கொடுக்கப் போகிறோம் என புதிய விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை பேச முடியும்.

மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறோம்.  ஏற்கனவே தொழில் வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்.  ஏறத்தாழ 10 லட்சம் கோடியை மூன்றை ஆண்டுகளில் கொண்டு வந்து கொடுத்த முதல்வர் எங்களிடம் இருக்கிறார். மகத்தான வளர்ச்சியை கோவைக்கும் திட்டம் என்று நாங்கள் சொன்னால் மக்கள் நம்புவார்கள் எதிரே இருப்பவர்கள் எதை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். வடையும் அல்வாவையும் தான் மக்களுக்கு கொடுக்கிறார்கள் தவிர வேறு எதையும் செய்யவில்லை. எல்லா இடத்திலும் ஒன்றிய அரசு கொடுத்த அல்வாவையும், மோடி சுட்ட வடையும் பற்றி மக்களிடம் கூறியிருக்கிறோம். எல்லோரும் மத்திய அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு ஒட்டுமொத்த தொகுதிகளும் நிச்சயமாக இண்டியா கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும்.

தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும் ஜனநாயகத்தின் ஒரே பாதுகாவலனாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். முதலில் அதிமுக இருக்கிறதா?  இருந்தால் அதைப் பற்றி பேசலாம்.  அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.  அதிமுக எங்கே வேலை செய்கிறது என்ற கேள்வியும் இருக்கிறது. கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் அமையும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Embed widget