மேலும் அறிய

Crime : கோவையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்தவர் கைது ; 320 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்

சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றை விற்பனை செய்பவர்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் போதை ஏற்றக் கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சூலூர் பகுதியை சேர்ந்த பப்ளு குமார் (36)  என்பவர் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பப்ளு குமாரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 1.600  கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பப்ளு குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனையாளர்கள் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திட வேண்டும் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – அடுத்த மாதம் தொடங்கும் பணிகள்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – தொடங்கும் பணிகள்?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget