மேலும் அறிய

கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது தொடர்பாக, சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.


கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த வாரம் சசிகலாவிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.


கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கோடநாடு, போயஸ்கார்டன் என ஜெயலலிதா தங்கி இருக்கும் இடங்களில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவைச் யாரெல்லாம் சந்திக்கிறார்கள், எது தொடர்பாக சந்திக்கிறார்கள் என்பதும், யாரைல்லாம் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதையும் பார்த்துக்கொள்பவராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவிற்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து அவரது பார்வைக்கு கொண்டு செல்வது உட்பட அனைத்து பணிகளையும் பார்த்து கொண்டவர். கோடநாடு பங்களாவில் பணிக்கு நியமிக்கபட்டவர்கள் குறித்தும் கோடநாடு பங்களாவில் உட்புற வேலைபாடுகளை செய்த சஜீவனின் பங்கு குறித்தும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இந்நிலையில் இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
Embed widget