மேலும் அறிய

2 கும்கி யானைகள்... 4 மோப்ப நாய்கள்..20 மருத்துவக் குழுக்கள்... 150 வன ஊழியர்கள்... எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?

புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி தென்பட்டால், கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று மயக்க ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது.


2 கும்கி யானைகள்... 4 மோப்ப நாய்கள்..20 மருத்துவக் குழுக்கள்... 150 வன ஊழியர்கள்... எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலியை பிடிக்கக் கோரி உள்ளூர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். புலியை சுட்டுக் கொல்ல ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியை சுட்டுக் கொல்வதா அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதா என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


2 கும்கி யானைகள்... 4 மோப்ப நாய்கள்..20 மருத்துவக் குழுக்கள்... 150 வன ஊழியர்கள்... எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?

எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் படி, புலியை பிடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வனப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். பல்வேறு பகுதிகளில் புலியை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், கேரளா புலிகள் பிடிக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதுமலை மட்டுமின்றி தேவன் எஸ்டேட், மே பீல்ட் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


2 கும்கி யானைகள்... 4 மோப்ப நாய்கள்..20 மருத்துவக் குழுக்கள்... 150 வன ஊழியர்கள்... எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?

புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 4 மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி தென்பட்டால், கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று மயக்க ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீனிவாசன், உதயன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 3 ட்ரோன்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல புலி நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு பகுதிகளில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிகள், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவை உடன் மருத்துவக்குழுவினரும், வனத்துறையினரும் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


2 கும்கி யானைகள்... 4 மோப்ப நாய்கள்..20 மருத்துவக் குழுக்கள்... 150 வன ஊழியர்கள்... எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?

புலி தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், புலியின் இருப்பிடத்தை கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 9 நாட்களாக வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று பத்தாவது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget