மேலும் அறிய

கோவையில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை ; காவல்துறையினர் விசாரணை

குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். 41 வயதான இவர் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமோதரன் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இதனிடையே தாமோதரன் அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அவரது மனைவி குழந்தையுடன் அவரது பெற்றோரின் ஊரான விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். தாமோதரன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். 

தாமோதரன் தற்போது மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஜடையம்பாளையம் கிராமம் வீராசாமி நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 10 ம் தேதி முதல் தாமோதரன் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி மாலை 6 மணிளவில் வீட்டில் தனியாக இருந்த தாமோதரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் தாமோதரன் வீட்டில் இரண்டு நாட்களாக இரவில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தமையால் சந்தேகத்தின் பேரில், இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தாமோதரன் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுகுமார் காரமடை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் தாமோதரன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget