மேலும் அறிய

’நீட் விவகாரத்தில் திமுக சொல்வது அனைத்தும் பொய்’ - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

”அதிமுக மாநாட்டைக் கண்டு பயந்து நடுங்கிப் போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றார்”

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில், இந்த மாநாடு சிறப்பாக அமையும். மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்  பங்கேற்பார்கள். இந்த மாநாட்டைக் கண்டு பயந்து நடுங்கிப் போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றார்.இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இப்போது இரண்டு ஆண்டுகள் உருண்டோடி 3-வது ஆண்டு நடக்கிறது. இந்த 3 ஆண்டு  காலத்தில் என்ன முயற்சி எடுத்தார்கள்? அதிமுக நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதிமுக எடுத்த அதே முயற்சிகளை தான் திமுகவும் செய்கிறது. நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு கூட எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆதரவை கேட்டு இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் திமுக செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

காவிரியில் 10 டி.எம்.சி வரை தண்ணீர் கொடுப்பதாக கர்நாடக துணைமுதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, ”இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூர் சென்ற முதல்வர் தமிழகத்தைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். நானும் டெல்டாகாரன் என்று சொன்னார், விவசாயம் காய்ந்து போனது. மாநிலத்தின் பிரச்சனை என்ற வந்த பொழுது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால், தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என கெஜ்ரிவால் சொன்னார். அவர் ஆண்மகன். வேண்டியதை கேட்டு பெறுகிறார். சரியான முறையில் செயல்பட்டார். அவரை போல் திமுக செயல்படவில்லை. காவிரி தீர்ப்புப்படி தண்ணீரை முழுமையாக திறந்து விட்டால் தான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை ஸ்டாலின் செய்யவில்லை கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் வந்து வரவேற்ற போது ஐந்து நிமிடம் அவரிடம் பேசி இருக்கலாம். மக்களைப் பற்றி கவலைப்படாமல், ஆட்சி அதிகாரம் மட்டுமே ஸ்டாலினுக்கு முக்கியமாக இருக்கின்றது” எனப் பதிலளித்தார்.

’நீட் விவகாரத்தில் திமுக சொல்வது அனைத்தும் பொய்’ - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அவர், “மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தி ஒன்றரை ஆண்டு கழித்து தற்போது அதற்கு புதிய பெயர் வைத்திருக்கிறார்கள். மதுரை மாநாடுக்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டு இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறை அனுமதி வாங்கி இருக்கிறோம். மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் தேவையான பாதுகாப்பு கேட்டு பெற்று இருக்கிறோம். மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு, வாகனங்கள் தடை இல்லாமல் வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்திரவு கொடுத்திருக்கிறது.

2010 டிசம்பரில் நீட் தொடர்பான உத்திரவு போடப்படுகின்றது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதும் திமுக தான். இப்போது அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதும் திமுக தான். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலி்ல் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக தான். யாராவது ஒருவர் மீது பழி செலுத்த வேண்டும் என்பதற்காகவே உதயநிதி பேசுகிறார். மத்திய அரசு சட்டங்களின் பெயர்களை இந்தி, சமஸ்கிருத்ததில் மாற்றி இருப்பது குறித்து முழுமையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் அது குறித்து பேசுகிறோம். நீட் விவகாரத்தில் ஆளுநர் பற்றி மட்டுமே கேள்வி கேட்கின்றீர்கள்? உச்ச நீதிமன்றம் குறித்து கேட்கமாட்டேன் என்கிறீர்களே? அதிமுக என்ன செய்ததோ அதைத்தான் திமுக செய்கின்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்து  இருக்கிறது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, சட்ட நுணுக்கத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தை நாடி அதற்கு தீர்வு காண வேண்டும். திமுக அரசு அதை செய்யாமல் சாக்குப் போக்கு சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. இதில் முதன்மையானவர் முதலமைச்சர். அவரை விட முதன்மையானவர் அவரது புதல்வர்” எனத் தெரிவித்தார்.

நீட்டில் கையெழுத்திடவே மாட்டேன் என ஆளுநர் சொல்லி வருவது குறித்த கேள்விக்கு, “கையெழுத்து போடுகின்றாரோ? இல்லையோ? எதற்கும் தில் வேண்டும். நான் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு எப்படி வாங்கி கொடுத்தேன்? அதிகாரத்தை வைத்து நான் என்ன செய்தேன்?உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றதே? அதை வைத்து செய்ய வேண்டும். எந்த அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சியில் தொடரவே விரும்புகின்றனர். பத்தாண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை இவர்களால் ரத்து செய்ய முடியாது. பேசுவது அத்தனையும் பொய்.

நீதிமன்றத்திற்கு எதிராக ஒரு மாநில அரசால் செயல்பட முடியுமா? அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் அதுவும் கைவிடப்பட்டது. அதிமுக உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 606 பேர் தேர்வாகி இருக்கின்றனர். திமுகவின் 27 மாத கால ஆட்சியில் 2,73,000  கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம். கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. இதில் எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கின்றனர். இனி கழிப்பறை கட்டினால் கூட திராவிட மாடல் ஆட்சி என்று சொல்வார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget