மேலும் அறிய

Dvac Raid : கோவையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ; முழு விபரம் இதோ

எஸ்.பி. வேலுமணி வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதை கண்டித்து, அவரது வீட்டின் முன்பு திரண்டு போராட்டம் நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இதனிடையே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த புகார் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dvac Raid : கோவையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ; முழு விபரம் இதோ

கடந்த 2016 முதல் 2018 ம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பொழுது தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு புகார் அளித்து இருந்தார்.  எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்  வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இன்று கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையை நடத்தி வருகின்றனர். 

Dvac Raid : கோவையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ; முழு விபரம் இதோ

கோவை மாநகரப் பகுதிகளில் 4 இடங்கள், புறநகர் பகுதிகளில் 6 இடங்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதேபோல புறநகரில்  நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இல்லம் சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம்,  ஏஸ் டெக் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் சுகுணாபுரம்  பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர். அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லேசான தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. 

Dvac Raid : கோவையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ; முழு விபரம் இதோ

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிய அனுமதி மறுத்த காவல் துறையினர், அங்கு திரண்டிருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அப்போது அதிமுக தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் காவல துறையினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
ஏழைகளுக்கான பட்ஜெட்: ஹிண்ட் கொடுத்த மோடி! வருமான வரி வரம்பில் ஜாக்பாட்?
ஏழைகளுக்கான பட்ஜெட்: ஹிண்ட் கொடுத்த மோடி! வருமான வரி வரம்பில் ஜாக்பாட்?
Economic Survey 2025 LIVE: அடிக்குது ஜாக்பாட்.. ரகசியம் சொன்ன பிரதமர் மோடி -  வரி குறைஞ்சு, வருமானம் எகிறுமா?
Economic Survey 2025 LIVE: அடிக்குது ஜாக்பாட்.. ரகசியம் சொன்ன பிரதமர் மோடி - வரி குறைஞ்சு, வருமானம் எகிறுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue | Vellore DMK Issue | ”நாளைக்கு நீ கடைபோட மாட்ட” திமுகவினர் அட்ராசிட்டி? நிகழ்ச்சியில் நடந்த சண்டைTrump Request Elon Musk | ”சுனிதாவை காப்பாத்துங்க..”உதவி கேட்ட ட்ரம்ப் உடனே இறங்கிய எலான் மஸ்க் | Sunita Williams

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
ஏழைகளுக்கான பட்ஜெட்: ஹிண்ட் கொடுத்த மோடி! வருமான வரி வரம்பில் ஜாக்பாட்?
ஏழைகளுக்கான பட்ஜெட்: ஹிண்ட் கொடுத்த மோடி! வருமான வரி வரம்பில் ஜாக்பாட்?
Economic Survey 2025 LIVE: அடிக்குது ஜாக்பாட்.. ரகசியம் சொன்ன பிரதமர் மோடி -  வரி குறைஞ்சு, வருமானம் எகிறுமா?
Economic Survey 2025 LIVE: அடிக்குது ஜாக்பாட்.. ரகசியம் சொன்ன பிரதமர் மோடி - வரி குறைஞ்சு, வருமானம் எகிறுமா?
உக்ரைன்,  ரஷ்யாவை பார்த்து பயப்படாத மோடி, திமுக அரசை பார்த்து பயப்பட போகிறாரா?  - அண்ணாமலை
உக்ரைன்,  ரஷ்யாவை பார்த்து பயப்படாத மோடி, திமுக அரசை பார்த்து பயப்பட போகிறாரா?  - அண்ணாமலை
இல்லத்தரசிகளுக்கு பேரிடி.. வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை!
இல்லத்தரசிகளுக்கு பேரிடி.. வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை!
Sunita Williams: சுத்தமா முடியல..! ஆனாலும் விண்வெளியில் புதிய சாதனை - சுனிதா வில்லியம்ஸின் சரித்திர சம்பவம்
Sunita Williams: சுத்தமா முடியல..! ஆனாலும் விண்வெளியில் புதிய சாதனை - சுனிதா வில்லியம்ஸின் சரித்திர சம்பவம்
ஈசிஆரில் இரவில் இளம்பெண்களை காரில் துரத்திய கும்பல்: வீடியோவை வைத்து 5 பேரை தூக்கிய போலீஸ்
ஈசிஆரில் இரவில் இளம்பெண்களை காரில் துரத்திய கும்பல்: வீடியோவை வைத்து 5 பேரை தூக்கிய போலீஸ்
Embed widget