மேலும் அறிய

திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

’’6 பேர் மீதும் கூட்டு சதி, குற்றம் செய்ய தூண்டுதல்,  தவறான ஆவணங்களை தயாரித்தல், பொது ஊழியர் குற்றம் செய்தல், மோசடி , ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு’’

கோவை அருகே குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த தளபதி முருகேசன் என்பவர் இருந்தார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அப்பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளர் மேனகா, செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், ஒப்பந்ததாரர் பார்த்திபன், புவனேஸ்வரி மற்றும் அப்போதைய பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட  விசாரணையில், கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் டெண்டர் பணிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் தகுதியற்றவர்களுக்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதலின்றி 94.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டதுடன், இந்த பணியை 27 பிரிவுகளாக பிரித்து ஒப்பந்ததாரர்களுக்கு  வழங்க அலுவலர்கள் மேகனா மற்றும் மகேந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும், இதற்கு பேரூராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த தளபதி முருகேசன் ஒப்புதல் வழங்கியதும் தெரியவந்தது. குழாய் பதிக்கும் பணிக்கு ஒப்பந்தம் பெற்ற பார்த்திபன் மற்றும் புவனேஸ்வரி தரமற்ற பிவிசி குடிநீர் குழாய்களை பதித்ததும், அதன் மூலம் சுமார் 48 லட்சம் ரூபாய் அளவுக்கு அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேர் மீதும் கூட்டு சதி, குற்றம் செய்ய தூண்டுதல்,  தவறான ஆவணங்களை தயாரித்தல், பொது ஊழியர் குற்றம் செய்தல், மோசடி , ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது முன்னாள் பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget