மேலும் அறிய

’உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது’ - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு

"கருணாநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை தாமதமாக கொடுத்தார். ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தாமதமாகத்தான் கொடுத்தார். அவருக்கு அந்த தகுதி இல்லையா?"

கோவை ராஜ வீதி தேர்நிலைத் திடல் பகுதியில் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நூறாவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய  டி.ஆர்.பாலு, “கருணாநிதி அன்பழகன் மீது பற்றும், பாசமும் வைத்திருந்தார். எமர்ஜென்சி காலத்தில் திமுகவினர் மிசா கொடுமைக்கு ஆட்பட்டனர். தொண்டனுக்காகவும் துடிக்க கூடியவர் கருணாநிதி. ஸ்டாலினும் அதேபோல இருக்கிறார்.

’உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது’ - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு

அன்பழகன் 80 ஆண்டு கால பொதுவாழ்விற்கு சொந்தக்காரர். அன்பழகன் பல பொறுப்புகளில் இருந்தார். சிறு குறை கூட சொல்ல முடியாத அளவு பணியாற்றினார். அவர் சமூக நீதி கண்ணாடி போட்டு பார்த்தார். பிற்கால சோழர் காலத்தில் பிரமாணர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. புராண இதிகாசங்களை வைத்து கலாச்சார சீரழிவை ஏற்படுத்தினர். மக்களை பிளவுபடுத்தினர். பிராமணர் அல்லாதவர்கள் படிக்க ஆதரவு இல்லாமல் இருந்தனர். வழியில்லாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதியை நடேசனார் ஆரம்பித்தார். இனம் வாழ தவிப்பவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட்டார்.

’உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது’ - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு

உயர் சாதியினரால் சர்.பிட்டி.தியாகராயர் இழிவு செய்யப்பட்டார். டி.எம்.நாயர், தியாகராயர், நடேசனார் இணைந்து தென்னிந்திய நல உரிமை சங்கத்தை துவக்கினர். அந்த சங்கம் நம்மை காக்க துவங்கிய பாதுகாப்பு அரண். ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் இயக்கமாக வளர்ந்தது. நீதிக்கட்சியினர் 1920 முதல் 1937 வரை முடிசூடாத மன்னர்களாக ஆட்சி செய்தனர்.  நீதிக்கட்சி காலத்தில் பஞ்சமரை ஆதி திராவிடர் எனப்பெயர் மாற்றம், வகுப்புரிமை சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இந்து அறநிலைய சட்டம், தேவதாசி ஒழிப்பு சட்டம், கூட்டுறவு சங்கம், கட்டாய கல்வி, பள்ளிகளில் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியது.

கருணாநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை தாமதமாக கொடுத்தார். ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தாமதமாக தான் கொடுத்தார். அவருக்கு கேபசிட்டி இல்லையா? பல இடங்களுக்கு சென்று பேசினார்.  ஒன்றரை ஆண்டுகள் கழித்து கொடுத்தது நமக்கு வருத்தம். இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான் அமைச்சராக இருக்க முடியும். சிறு பிள்ளையான அவர் பொறுத்துக் கொள்வார்.

’உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது’ - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு

தீண்டாமை, பெண்ணடிமை ஒழிக்க பெரியார் பாடுபட்டார். கோவிலுக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என நினைத்தவர் பெரியார். நீதிக்கட்சி, திராவிடர் கழகத்தின் பரிணாம வளர்ச்சி திமுக திமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என சொன்னவர் அன்பழகன் தான். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரும் திட்டம் என்னாச்சு என கேட்கின்றனர். வெயிட் அண்ட் ஜி. திமுக வந்தால் உடனடியாக செய்ய வேண்டும் என பெண்கள் நினைக்கின்றனர். எப்போது எதை செய்ய வேண்டும் என ஸ்டாலினுக்கு தெரியும். முதலமைச்சர் கட்சி, ஆட்சியை நடத்துவதோடு மக்களை பாதுகாக்கிறார். பெண்களுக்கு கிடைக்க வேண்டியது சரியான நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும். பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
" உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க..."கலங்கிய சிவகார்த்திகேயன்
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget