மேலும் அறிய

A Rasa Speech : நாடாளுமன்றத்தில் வைத்து திருடிப் போகிறீர்களே.. ’இதைக் கேட்டால் நான் தேசத்துரோகியா?’ - ஆ.ராசா எம்.பி. ஆவேசம்

"மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் மனம் வெள்ளைக்காரனுக்கு இருந்தது. ஆனால் கேட்காமலேயே எங்களது சொத்துக்களை லாவகமாக நாடாளுமன்றத்தில் வைத்து திருடி போகிறீர்களே. நீ நல்லவனா? அவன் நல்லவனா?”

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி முதல் காஷ்மீர் முதல் இருண்ட காலமாக உள்ள நிலையில், கோவையில் மெழுகுவர்த்தி மூலம் ஒளி ஏற்றப்பட்டு உள்ளது. 1800 களில் துவங்கியதே இட ஒதுக்கீடு. இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களாக தற்போது வரை இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. 

பின் தங்கியவர்கள் என்ற வார்த்தை கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டதை, அம்பேத்கர் சமூகத்தில், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக மாற்றினார். யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். ஜாதி உளவியலில் வெற்றி பெறுகிறது. என்னை ஒருவன் தாழ்ந்தவன் என்று சொல்கிறானோ இல்லையோ தாழ்ந்தவனாகவே நடந்து கொள்வது உளவியல். இந்த ஜாதிய பண்பை உடைப்பது தான் சமூக நீதி. அப்படி உடைப்பதற்காக தான் இட ஒதுக்கீடு அப்படி உடைப்பதற்காக தான் கல்வி. வெள்ளைக்காரர்களுக்கு மனிதாபிமானம் இருந்தது. வெள்ளைக்காரனை பெரியார் ஆதரித்ததற்கு அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியை வழங்க நினைத்தார்கள். 

பெரியார் சுதந்திரத்தை ஒப்புக்கொள்ளவில்லை.  வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரன் பிராமணர்களுக்கு எழுதிக்கொடுத்தது என்றார். சாதி ஒழிய போவதில்லை, எதுவும் நடக்கப்போவதில்லை சுதந்திர நாள் துக்க நாள் என்றார். நாடாளுமன்றத்தில் பல பேர் வாய்கிழிய பேசுகிறார்கள் தேசபக்தியில். 7 லட்சம் கோடி பொருளை வெள்ளைக்காரன் கொண்டு போய் அங்கு வைத்து விட்டான் என சசிதரூர் மற்றும் மோடியின் பக்கத்தில் உள்ள அமைச்சர்கள் பேசுகின்றனர். அதற்கு நான் கேட்டேன். வெள்ளைக்காரன் எடுத்துக் கொண்டு போவதற்கு எங்கள் வீட்டில் எதுவும் அப்போது இல்லை. வெள்ளைக்காரன் எடுத்துப் போன இரும்பு டாடா, பிர்லாவிடம் இருந்தது. பிர்லாவிடம் காந்தி இருந்தார். காந்தியிடம் காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸ் பிராமணர்களிடம் இருந்தது.

மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் மனம் வெள்ளைக்காரனுக்கு இருந்தது. ஆனால் கேட்காமலேயே எங்களது சொத்துக்களை லாவகமாக நாடாளுமன்றத்தில் வைத்து திருடி போகிறீர்களே. நீ நல்லவனா? அவன் நல்லவனா? இதை கேட்டால் சொல்லி விடுவார்கள், ராஜா தேச துரோகி என்று. இதற்கு ஆம் நான் தேசத்துரோகி தான். பார்ப்பனப் பட்டமும் பர பள்ள பட்டமும் போய் எல்லோரும் மனிதப் பட்டத்திற்கு வர போராடும் போது தேச துரோகம் என்றால் அதை நான் சாகும்வரை செய்வேன் என பெரியார் சொன்னார். எது தேச துரோகம்? எங்களிடம் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீட்டை எடுத்து சென்றது தான் தேச துரோகம்.

A Rasa Speech : நாடாளுமன்றத்தில் வைத்து திருடிப் போகிறீர்களே.. ’இதைக் கேட்டால் நான் தேசத்துரோகியா?’ - ஆ.ராசா எம்.பி. ஆவேசம்

அப்போது 10 % இட ஒதுக்கீட்டை எடுத்து போயிருந்தால் ராஜா ஓபன் கமிஷனில் வர முடியுமா? கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள். ஜாதியால் இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டாம் என்றார்கள். அப்போது அம்பேத்கர், யாரெல்லாம் சமூகத்தில் பின்தங்கி உள்ளார்களோ அவர்களை கவனித்துக் கொள்கிறேன் என்றார். இட ஒதுக்கீடு ஆய்வு செய்யும் போது தான் தெரிகிறது தாழ்த்தப்பட்டவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அதே நிலையில் கள்ளர்கள் சாணர்கள் இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் தேசபக்தியில் பலர் பேசுகின்றனர். வெள்ளைக்காரன் குறித்த கேள்விக்கு என்னை தேச துரோகி என்கிறார்கள். பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்தது தேச துரோகமா.? பிரதமர் சொன்ன 140 கோடி எங்கள் பின்னால் இருக்கிறார்கள் என சொன்னார். நான், எங்களுக்கு வாக்களித்தவர்களோடு சேர்த்து 40 கோடி பேர் எங்கள் பின்னால் உள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியல் வெள்ளைக்காரர்களிடம் இருந்ததால் இட ஒதுக்கீடு எனக்கு எளிதாகிவிட்டதாக அம்பேத்கர் சொன்னார். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களும் அதிகாரத்தில் வர வேண்டும் என்றார் அம்பேத்கர்.

கவர்னர் சனாதனம் எனத் தொங்கிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பேசும்போது சொன்னேன். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஐந்து, ஆறு திட்டங்கள் இருந்தது. 1800 கோடி ஆண்டுக்கு கொடுத்து வந்த நிலையில் தற்போது ஆனால் இந்த ஆண்டு அதற்கான நிதியில் 600 கோடியாக சத்தம் இல்லாமல் குறைத்து விட்டனர். இது தொடர்பாக நான் கேட்ட போது, அதுக்கு செலவு பண்ண இடம் இல்லை என திமிராக பதில் தெரிவித்தனர்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையை மாற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை. செக்யுலர் என்ற வார்த்தையை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி. வி.பி.சிங் சொன்னார், சமூக நீதியை தென்னகத்தின் திராவிட இயக்கம் சொல்லிக்கொடுத்தது. அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் அரசியலில் வரக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்ற அம்பேத்கர். அதற்கு ஆணையத்தை ஏற்படுத்த மறுத்தவர் நேரு.

இட ஒதுக்கீடு தான் இந்திய அரசியல். உங்களை விட அவர்களுக்கு நன்றாக தெரியும் ராமர் பொய் என்று. ஆட்சியைக் கலைக்க ரத யாத்திரை, சமத்துவத்தை உளவியல் ரீதியாக கட்டமைக்க இட ஒதுக்கீட்டை திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டின் மரபு என்று உடன்கட்டையை ஆதரித்து பேசினார். நாங்கள் நிறுத்து என்றோம். உங்களை எரித்து விடுவோம். 200 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு போர் நடந்து வருகிறது.

சாதி யார் பார்கிறார் என கேட்பவர்கள் சுப்ரீம் கோர்ட்டை பார்த்து வா; இஸ்ரோவை பார்த்து வா, ஐஐடியை பார்த்துவா. 70 ஆண்டுகளாகியும் 6% மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது, 5.9% பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 30,000 மேல் ஊதியம் பெறுபவர்களில் தனியார் துறையில் 85%ல் 0.97% தாழ்த்தப்பட்டவர்களுக்கு, 3% பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 15% அரசு துறையில் வேலைவாய்ப்பில் 6% தாழ்த்தப்பட்டவர்களிடம் உள்ளது. இட ஒதுக்கீட்டை தெரிந்து கொள்ள மண்டல் கமிஷனை படியுங்கள். பெரியாரை அண்ணாவை கலைஞரை படியுங்கள் ஸ்டாலினை ஆதரியுங்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget