மேலும் அறிய

Covai: பிறந்து 7 நாட்களே ஆன சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை - 2.45 மணி நேரத்தில் 220 கிமீ பயணம், சீறிய ஆம்புலன்ஸ்

Covai: பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு கோவையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Covai: இதய அறுவை சிகிச்சைக்காக குழந்தை, திருச்சியில் இருந்து கோவைக்கு 2.45 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிசுவிற்கு அறுவை சிகிச்சை:

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினிமா பாணியில், பிறந்த 7 நாட்களே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்காக அந்த குழந்தை திருச்சியில் இருந்து கோவைக்கு, ஆம்புலன்ஸ் மூலமாக 2.45 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் நவகுடியைச் சேர்ந்தவர்கள் தான் திருமுருகன் துர்காதேவி தம்பதி. இவர்களுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது. அப்போது மேற்கொள்ளப்பட மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையை உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.

கோவையில் அறுவை சிகிச்சை ஏற்பாடுகள்:

இதைத் தொடர்ந்து, குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பர்சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு  இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேநேரம், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லை எனவும்,  கோவையில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை அங்கு அழைத்துச் செல்ல பெற்றோர் முடிவு செய்தனர். அதுவும் சாலை மார்க்கமாகவே குழந்தையை அழைத்துச் செல்ல திட்டமிட்டு, இதற்காக போக்குவரத்தை சீர்படுத்தி தருமாறு காவல்துறையை நாடினார். அவர்களும், தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.

2.45 மணி நேரம், 220 கிமீ தூரம் - சீறிய ஆம்புலன்ஸ்: 

திட்டமிட்டபடி, புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து குழந்தையை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ், அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து 2.45 மணி நேரத்தில் கோவை மருத்துவமனையை வந்தடைந்தது. ஆம்புலன்ஸ் பயணித்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், காவல் துறையினர் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

கண்காணிப்பில் குழந்தை:

அறுவை சிகிச்சை மேற்கொண்ட கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், ”குழந்தைக்கு இதயத்தில் இருந்து சுத்த ரத்தத்தை உடல் முழுக்க கொண்டு செல்லும் தமணியில் சுருக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என்றார். இதையடுத்து அந்த குழந்தை தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பயணம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், ”குழந்தையை விரைவாக கோவை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. காவல் துறை மற்றும் மக்கள் ஒத்துழைப்பால் ஆம்புலன்ஸ் வாகனத்தை எளிதில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிந்தது. இதனால், மூன்றரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை இரண்டே முக்கால் மணி நேரத்தில் கடக்க முடிந்தது” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்Haryana BJP : காலைவாறும் EX-அமைச்சர்கள் திணறும் ஹரியானா பாஜக! வெடித்த உட்கட்சி பூசல்Udhayanidhi Stalin : உதயநிதியின் ஸ்கெட்ச்!அதிகாரிகள் ‘கப்சிப்’ மதுரையில் சம்பவம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகளின் முடி கத்தரிப்பு; வைரல் வீடியோ- உண்மை என்ன?
கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகளின் முடி கத்தரிப்பு; வைரல் வீடியோ- உண்மை என்ன?
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப சேவையில் 861 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப சேவையில் 861 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Toll Tax in Highways: ஜிஎன்எஸ்எஸ் சுங்க வரி வசூல் முறை - இதை செய்தால் 20 கி.மீ.,க்கு கட்டணம் ரத்து - அரசு அதிரடி திட்டம்
Toll Tax in Highways: ஜிஎன்எஸ்எஸ் சுங்க வரி வசூல் முறை - இதை செய்தால் 20 கி.மீ.,க்கு கட்டணம் ரத்து - அரசு அதிரடி திட்டம்
Embed widget