மேலும் அறிய

கோவையில் 177 பேருக்கு கொரோனா தொற்று ; 4 பேர் பலி

கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2151 ஆக அதிகரிதுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 177 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 27 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 381 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2151 ஆக அதிகரிதுள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 2.0 ஆக குறைந்துள்ளது.

ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோட்டில் இன்று 135 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 211 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 92578 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 90179 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 626 ஆக உள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 1.9 ஆக குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 92 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 140 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 87111 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 84805 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 815 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 2.0 சதவீதமாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 93 பேர் குணமடைந்துள்ள நிலையில், 780 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 30131 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29177 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 174 ஆக உள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.1 ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Breaking News LIVE 7 Oct : தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 7 Oct : தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Breaking News LIVE 7 Oct : தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 7 Oct : தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
TN Rain Updates: இன்று 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை, சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: இன்று 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை, சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
Nalla Neram Today Oct 7: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Oct 7: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 7: மகரத்துக்கு திருமண செய்தி, தனுசு போட்டிகளை சமாளிப்பீர்கள் - உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: மகரத்துக்கு திருமண செய்தி, தனுசு போட்டிகளை சமாளிப்பீர்கள் - உங்கள் ராசிக்கான பலன்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Embed widget