மேலும் அறிய

கோவை : புதிதாக இன்று 198 பேருக்கு கொரோனா தொற்று ; 5 பேர் உயிரிழப்பு..!

கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று தினசரி தொற்று 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தது. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் 70 நாட்களுக்குப் பிறகு கடந்த 11 ம் தேதி சென்னை மீண்டும் தினசரி பாதிப்பில் முதலிடம் பிடித்தது. அடுத்த நாளே கோவை மீண்டும் முதலிடம் பிடித்த நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் சென்னை முதலிடத்திற்கு வந்தது. நேற்று கோவையில் தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து மீண்டும் முதலிடத்திற்கு வந்தது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று தினசரி தொற்று 200 க்கும் கீழ் குறைந்துள்ளது.

கோவையில் இன்று 198 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 29 ஆயிரத்து 106 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2232 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோட்டில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 9 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 96868 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 94406 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 642-ஆக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 92 பேர் குணமடைந்துள்ள நிலையில், 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 89451 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87659 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 903-ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 46 பேர் குணமடைந்துள்ள நிலையில், 449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31374 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30735 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 190-ஆக உள்ளது.

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
Coimbatore power cut: கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget