மேலும் அறிய

NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!

சுமார் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் பேர் மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்ட நிலையில் ஆண்களை விடப் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான மறு நீட்தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளின்படி, நீட் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் முடிவுகளில் முக்கிய ஹைலைட்ஸ் இதோ!

பெண்களின் ஆதிக்கம்

சுமார் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் பேர் மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில், தகுதி பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 58 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • நாடு முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் மொத்தம் 13 மொழிகளில் 5,440 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
  • மொத்த தேர்வர்கள்: இத்தேர்வெழுத மொத்தம் 24,06,079 பேர் பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 20 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
  • டாப்பர்களின் எண்ணிக்கை: 720க்கு 715 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை ஆர்யன் குப்தா (பஞ்சாப்) மற்றும் பன்ஷுல் பன்சால் (ஹரியானா) ஆகியோர் கூட்டாகப் பெற்றனர்.
  • இந்தத் திருத்தப்பட்டஇறுதிமதிப்பீட்டுமுறையினால், 720-க்கு 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது.
  • இந்த 138 பேரும் நாடு முழுவதும் 66 நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 705 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேர் பெற்றுள்ளனர். இவர்கள், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடுமற்றும்தெலங்கானாமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • 700 மதிப்பெண்களுக்கு மேல் 19 தேர்வர்கள் பெற்றுள்ளனர்.
  • 1,492 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலும்10,160 பேர் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகௌம் பெற்றுள்ளனர்.
  • முதல் முறையாக 93 சதவீத தேர்வர்கள், நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 99 சதவீத தேர்வர்கள், 17 முதல் 19 வயது வரை இருப்பவர்கள் ஆவர்.
  • மாற்றியமைக்கப்பட்ட கட்-ஆஃப்: திருத்தப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பொதுப்பிரிவு, ஓபிசி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
  • மதிப்பெண் சான்றிதழ்: மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுப் புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • சந்தேகங்கள், புகார்களுக்கு: neetug2026@nta.ac.in அல்லது 011-40759000

இந்தத் திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget