மேலும் அறிய

Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?

Hyundai Compact SUV EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 500 கிலோ மீட்டர் ரேஞ்சுடன், ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ள புதிய காம்பேக்ட் மின்சார எஸ்யுவி குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Hyundai Compact SUV EV: ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் மின்சார எஸ்யுவி, மிகவும் தீவிரமான தொடக்க விலையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஹுண்டாயின் காம்பேக்ட் மின்சார எஸ்யுவி EV

ஹுண்டாய் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது மின்சார கார்களுக்கான, போட்ர்ஃபோலியோவை விரிவுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் தயாராகி வரும் காம்பேக்ட் மின்சார எஸ்யுவி ஆனது, அடுத்தடுத்து சாலை பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டு வருகிறது. பெரிய அளவில் மூடி மறைக்கப்பட்ட வகையில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது, நடப்பாண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய கார் விற்பனைக்கு வரும் என்பதை உணர்த்துகிறது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் க்ரேட்டா மின்சார எடிஷனுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டு, ஹுண்டாயின் மிகவும் மலிவான மின்சார எஸ்யுவி ஆக சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

ஹுண்டாயின் புதிய EV - 500KM ரேஞ்ச்

ஹுண்டாயின் புதிய எஸ்யுவி 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தைகளுக்கான கார் மாடல்களில் ஹுண்டாய் மற்றும் கியா நிறுவங்கள் தொழில்நுட்ப அம்சங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கியா நிறுவனத்தால் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள, சைரோஸ் மின்சார எடிஷனின் பல அம்சங்களை ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி பகிர்ந்துகொள்ளக்கூடும். சைரோஸ் ஆனது 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, முறையே 443 மற்றும் 526 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் மின்சார எஸ்யுவியிலும், இதேபோன்ற பேட்டரி ஆப்ஷன் இடம்பெற்றால் பெரிய பேட்டரி பேக் எளிதில் 500 கிலோ மீட்டர் ரேஞ்சை கடக்கக் கூடும்.

ஹுண்டாயின் புதிய EV - டிசைன் எப்படி?

ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ்யுவிக்களின் டிசைனை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு தனித்துவமான வடிவமைப்பு பின்பற்றப்பட்டுள்ளதை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உணர்த்துகின்றன. அதன்படி சோதனையில் காணப்பட்ட வாகனமானது,  வென்யு காருக்கு ஒப்பான உயரமான தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன், ஹுண்டாயின் சர்வதேச மின்சார கார் மாடல்களால் ஈர்க்கப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களையும் கொண்டுள்ளது.

பகல் நேரங்களில் ஒளிரும் LED விளக்குகள் முகப்புப் பகுதியின் மேல்புறத்தில் அமைந்துள்ளன. அதேசமயம் பிரதான ஹெட்லைட்கள் பம்பருக்குள் கீழ்ப்புறமாக இடம்பெற்றுள்ளன. இதுபோக கதவுகளுடன் சமமாகப் பொருந்தும் கைப்பிடிகள், கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், சுமார் 16 இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள், கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட பின்புற ரிஃப்லெக்டர்கள் ஆகியவை காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்

ஹுண்டாயின் புதிய EV - அம்சங்கள், வசதிகள்

சுமார் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கனெக்டட் வெஹைகிள் டெக்னாலஜி மற்றும் லெவல் 2 ADAS ஆகிய அனைத்தும் டாப்-எண்ட் வேரியன்ட்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைரோஸ் மின்சார எடிஷனைப் போலவே, பெரிய பேட்டரி கொண்ட இதன் வேரியன்ட்டும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெறக்கூடும். பேட்டரி தெர்மல் மேனேஜ்மென்ட், ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் மற்றும் கனெக்டட் சார்ஜிங் செயல்பாடுகளும் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்கள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், வெண்டிலேடட் வசதியுள்ள முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெறக்கூடும். பயணிகளின் பாதுகாப்பிற்காக 360-டிகிரி கேமரா,  ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஒரு விரிவான ஆக்டிவ் பாதுகாப்பு தொகுப்பு ஆகியவை அடங்கும்.


Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?

ஹுண்டாயின் புதிய EV - விலை, போட்டியாளர்கள்

ஹுண்டாயின் புதிய மின்சார காம்பேக்ட் எஸ்யுவி ஆனது டாடா நெக்ஸான் EV, டாடா பஞ்ச் EV, மஹிந்திரா XUV 3XO EV மற்றும் கியா சைரோஸ் EV ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இவற்றிற்கு கடும் நெருக்கடியை தரும் விதமாக, காரின் தொடக்க விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17.5 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை தீவிரமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget