மேலும் அறிய

தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை

அரியலூரில் வங்கிக் கடன் தவணையை திரும்பி செலுத்தாத விவசாயியை, தனியார் வங்கி ஊழியர்கள் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தியதால், விவசாயி மன உளைச்சலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம்,  திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி என்று கிராமம் உள்ளது. இங்கு மேட்டுத் தெருவில் வசிக்கும் விவசாயி கோவிந்தராஜ்.

இவருக்கு கமலா என்ற மனைவியும், கல்லூரி படிக்கும் மகனும், 11-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். 

இவர் கடந்த ஜனவரி மாதம், ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கறவை மாட்டுக் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் 11,958 ரூபாய் தவணை தொகையாக செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கோவிந்தராஜ் குடும்ப சூழல் காரணமாக கடந்த மாதம் வங்கித் தவணைத் தொகையை செலுத்த தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இதனால், தனியார் வங்கி வசூல் ஏஜெண்டுகள் சிலர் கோவிந்தராஜை மேட்டுத்தெருவிலுள்ள அவரது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தவணைப் பணத்தைக் கேட்டு கடுமையான நெருக்கடி அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் கோவிந்தராஜ் கடைவீதிக்கு சென்றபோது அங்கும், கடனை திரும்ப செலுத்த சொல்லி பொதுவெளியில் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால், கோவிந்தராஜும் அவரது மனைவியும் கமலாவும் கடும் மன உளைச்சலுக்குள்ளானார்கள்.

இதையடுத்து, தவணை செலுத்த தேவையான பணத்தை புரட்டுவதற்காக கோவிந்தராஜின் மனைவி நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் கோவிந்தராஜ், வங்கி ஊழியர்களால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை வீடியோவாக பேசிப் பதிவு செய்துவிட்டு, தனது வீட்டிற்கு அருகே இருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றிய திருமானூர் காவல்துறையினர், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget