மேலும் அறிய

மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!

பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் விரைவு சேவை வழங்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கையினை மேலும் அதிகரிப்பதற்கும் பொருளாதார காரணங்களால் எந்தவொரு மாணவரும் உயர்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அலுவலர் நியமனம்

அதன்படி, மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதை திறம்பட செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் (Facilitation Officer) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கிணைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள். பொறியியல், பலவகை தொழில்நுட்பம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள். ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பாலம்

கல்விக் கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டால் கல்வி கடன் குறித்த அனைத்து விவரங்களையும் மாணாக்கர்களுக்கு வழங்குவர். அத்தோடு மாவட்ட முன்னணி வங்கி மேலாளரையும் தொடர்பு கொண்டு மாணாக்கர்களுக்கும் வங்கிக்கும் ஒரு இணைப்பு பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் செயல்படுவர்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சுல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை மற்றும் உதவி மையமாக செயல்படும். கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலர் (Nodal Officers அவர்களுடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இணைந்து செயல்படுவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் மூலம் பெறப்படுகின்ற கல்வி கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Coordinators) மற்றும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitation Officers) மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் (Nodal Officer) அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கி வாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வார்.

உடனடியாக கல்விக்கடன்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி வாரியாகவும் வங்கிகள் வாரியாகவும் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம் மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடியாக கல்விக்கடன் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பின் மூலம் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி பாதிக்கப்படாமல் தகுதியான பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் எளிதில் கல்விக் கடன் பெற்று தங்களது கல்வியைத் தொடரும் வாய்ப்பு உறுதி செய்யப்படுவதுடன் உயர்கல்வித் துறையில் மாணாக்கர் சேர்க்கையும் மேலும் அதிகரிக்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆணையர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Embed widget