மேலும் அறிய

Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்

Cheapest Diesel SUV Kia Sonet: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவியான கியா சோனெட்டை நிதி அழுத்தமின்றி சொந்தமாக்குவதற்கான, எளிய திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Cheapest Diesel SUV Kia Sonet: கியா சோனெட் குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி:

இந்திய சந்தையில் எஸ்யுவிக்களுக்கான வரவேற்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், மைலேஜ் மீதான எதிர்பார்ப்பும் பயனர்களிடையே குறைந்தபாடில்லை. அந்த வகையில் எஸ்யுவி பிரிவில் சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலை தேடுபவர்களுக்கு டீசல் வாகனங்கள் நல்ல தேர்வாக இருக்கும். நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி பிரிவில் மஹிந்த்ராவின் பொலேரோ முதல் இடத்தில் உள்ளது. ஆனால், மாடர்னான மற்றும் கூடுதல் மைலேஜ் வழங்கக் கூடிய ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யுவியை விரும்பினால், சுமார் 50 ஆயிரம் அதிக விலை கொண்ட கியாவின் சோனெட் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த காரை எளிய நிதி திட்டங்கள் மூலம் சொந்தமாக்குவது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கியா சோனேட் டீசல் எஸ்யுவி - விலை வரம்பு

கியா சோனெட் கார் மாடலின் விலை வரம்பானது ரூ.7.33 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.14.09 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. இதில் டீசல் எடிஷனின் எண்ட்ரி லெவல் வேரியண்டின் ஆன் - ரோட் விலையானது சென்னையில்,10 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் ரூ.9.19 லட்சம் எக்ஸ் - ஷோரூம் விலை, பதிவுக்கட்டணம் சுமார் ரூ.1.23 லட்சம், காப்பீட்டு கட்டணம் சுமார் ரூ.42 ஆயிரம் மற்றும் இதர கட்டணங்கள் சுமார் ரூ.3,800 ஆகியவை அடங்கும். ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருந்தாலும், மலிவு விலை கருத்தில் கொண்டு, மேனுவல் கியர்பாக்ஸ் இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சோனேட் டீசல் எஸ்யுவி - EMI விவரங்கள்

பொதுவாக வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு, கணிசமான தொகையை கடனமாக பெறுவதே லாபகரமானது. அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.6.89 லட்சத்தை முன்பணமாக செலுத்தி கியா சோனெட்டின் HTE (O) டீசல் வேரியண்டை தேர்வு செய்தால், மீதமுள்ள சுமார் ரூ.4 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும். 

அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 5 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 8 ஆயிரத்து 100 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அதன் முடிவில் அசலுடன் கூடுதலாக வட்டியாக மட்டுமே சுமார் 86 ஆயிரம் ருபாயை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.11.60 லட்சத்தை செலுத்தி இந்த டீசல் எஸ்யுவியை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை முன்தொகையை இன்னும் அதிகமாக செலுத்தினால் உங்களது வட்டி சுமை மற்றும் மாதாந்திர தவணை வெகுவாக குறையக்கூடும்.

இதையும் படியுங்கள்: Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?

சோனேட் டீசல் எஸ்யுவி - 24KM மைலேஜ்

கியா சொனேட்டில் 1.5 லிட்டர்  டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிஜ உலக பயன்பாட்டில் நகரப்பகுதியில் 16 முதல் 18 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலை பகுதிகளில் 22 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படுவதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 10.5 நொடிகளிலிருந்து 12 நொடிகளில் எட்டும் என கூறப்படுகிறது.

சோனேட் டீசல் எஸ்யுவி - அம்சங்கள், வசதிகள்

பொலேரோவை காட்டிலும் சோனெட்டை பரிந்துரைப்பதற்கு, இதன் ப்ரீமியம் தோற்றமும், அதற்காக வழங்கப்பட்டுள்ள அம்சங்களும் முக்கிய காரணங்களாகும். அதன்படி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்வர்ட் ஓட்டுனர் இருக்கை, வைரஸ் பாதுகாப்புடன் கூடிய ஏர் சுத்திகரிப்பான், வயர்லெஸ் போன் சார்ஜர், 10.25 இன்ச் எச்டி டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பில்ட்-இன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே,  7 ஸ்பீக்கர் போஸ் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம், 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. மேற்குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள கார்களுக்கு முன்னதாக, சோனெட்டில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்

சோனேட் டீசல் எஸ்யுவி - பாதுகாப்பு அம்சங்கள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் நிலையானதாக வழங்கப்படுகின்றன. இதுபோக எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷனுடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ப்ரேக் அசிஸ்ட், டாப் ட்ரிம்களில் ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வெஹைகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், ஹைலைன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எமர்ஜென்சி ஸ்டாப் சிகனல், இம்பேக்ட் சென்சிங்  ஆட்டோ டோர் அன்லாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன,

உள்நாட்டில் இந்த கார் இதுவரை பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதேநேரம், இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சோனெட்டானது, தென்னாப்ரிக்காவின் சர்வதேச மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டது. அதில் பெரியவர்களுக்கான பிரிவில் ஒரு ஸ்டாரும், குழந்தைகளுக்கான பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் சோனெட் பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget