மேலும் அறிய

Corona | கோவை: ஒரே கல்லூரியில் 46 மாணவிகளுக்கு கொரோனா.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் இருந்து வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் மூலமாக கொரோனா நோய்த் தொற்று பரவியதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. இதனிடயே கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தை பிடித்தாலும், கோவையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் ஊடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. அதேபோல கடந்த ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. செவிலியர் கல்லூரி விடுதியில் உள்ள 46 மாணவிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Corona | கோவை: ஒரே கல்லூரியில் 46 மாணவிகளுக்கு கொரோனா.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கோவை சரவணம்பட்டி அருகே கே.ஜி. செவிலியர் கல்லூரி மற்றும் விடுதி உள்ளது. கல்லூரி செயல்பட துவங்கியதை அடுத்து, பிற மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவிகள் கல்லூரிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வந்து, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் மூலமாக கொரோனா நோய்த் தொற்று பரவியதாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 46 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்த மாணவிகளுக்கு சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வந்த மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுதியில் தங்க வைத்து, விதிமீறி செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இதனிடையே அனைத்து கல்லூரி விடுதிகளிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்களை 10 நாட்கள் விடுதிகளில் தனிமைப்படுத்த வேண்டுமெனவும், மாணவ, மாணவிகளை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்லூரி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget