மேலும் அறிய

மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சாலையில் படுத்து உருண்டு எதிர்ப்பு தெரிவித்த வேட்பாளர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில், தேர்தல் தொடர்பான பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, தேர்தல் அதிகாரியிடம் கடுமையாக முறையிட்டார். தனது மனு திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாகவும், தன்னிடம் அநீதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோதும், தெளிவான பதில் வழங்கப்படவில்லை என ஜெயராஜ் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கோவை சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பதற்றமான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ஜெயராஜை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என்றும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு, அந்த தொகுதியில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget