Coimabatore Power Shutdown: கொங்கு மக்களே அலர்ட்... அனல் கக்கும் வெயிலில் நாளைய மின் தடை இங்கு தான்?
Coimabatore Power Shutdown: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது

Coimabatore Power Shutdown: மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்படுவது வழக்கம். இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
பராமரிப்பு:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
மின் தடை செய்யப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடத்தில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், கோவையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில இடங்களில் இந்த மின் தடையானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடையானது செய்யப்படும்.
கோவையில் நாளைய மின்தடை: 09-06-2025
எம்.ஜி சாலை:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
எம்ஜி சாலை, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர், ஒண்டிப்புதூர்
துடியலூர்:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கேஎன்ஜிபுதூர், விஜி மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகள்
மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





















