Coimbatore Power Shutdown: மோட்டர் போட்டுக்கோங்க கோவை மக்களே! நாளை(19-11-25) மின் தடை செய்யப்படும் பகுதிகள்.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவையில் (19-11-2025 ) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

Coimbatore Powern Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் 19-11-2025 அன்று மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். . இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
நாளை எங்கெல்லாம் மின் தடை:
கலப்பட்டி:
கே.வி. கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்
விளாங்குறிச்சி
தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்
கீரநத்தம்
கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், வின்
கே.ஜி.சாவடி
சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
- மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
- மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
- மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
- மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
- மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
- மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்





















