மேலும் அறிய

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு.. போராடும் விவசாயிகள்..

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள, ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள, ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகள், இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 

பி.ஏ.பி என அழைக்கப்படும் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு, பாலாறு படுகைகள் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு, பாலாறு ஆறுகள் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.  பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. பி.ஏ.பி. திட்டத்தில் நீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு.. போராடும் விவசாயிகள்..

இந்நிலையில் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து, விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது எனவும், ஆழியார் அணை நீரை கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு மாற்றுத் திட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிடவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து புதிய ஆயக்கட்டு செயலாளர் செந்தில் கூறுகையில், “இது விவசாயிகள் பிரச்சனை மட்டும் இல்லை. இந்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனை. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். 

930 கோடி ரூபாய் செலவில் 130 கி.மீ. தூரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதற்கு பதிலாக மாற்றுத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை கைவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
Embed widget