மேலும் அறிய

Crime: கணவரை கொலை செய்ய முயற்சித்த துணை நடிகை கைது - பொள்ளாச்சியில் பரபரப்பு

சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய சீரியல் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா கணவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சீரியல் நடிகை கணவரை கொலை செய்ய நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மற்றும் நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.

துணை நடிகை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரை ரமேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே கடந்த சில மாதங்கள் முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பீளமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரம்யா சென்று விட்டார். 

சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்ததால், கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகர் என்பவருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியல் நாடகங்களில் ரம்யா துணை நடிகையாக நடித்து வருகிறார். ரமேஷ் இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரம்யா சில தினங்கள் முன்பு பொள்ளாச்சியில் உள்ள ரமேஷ் வீட்டுக்கு வந்து விட்டார். 

கொலை முயற்சி:

இந்நிலையில் ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்து விட்டு கொடுமை படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதையடுத்து சந்திரசேகர் நேற்று முன்தினம் இரவு ரம்யாவும், ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார்.

அப்போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த ஆக்ஸாபிலைட் மூலம் ரமேஷை கை, கழுத்து, தலை பகுதிகளில் தாக்கி விட்டு தப்பித்து விட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரமேஷ் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ரம்யாவிடம் விசாரித்த போது சந்தேகம் எழுந்ததால் அவரது மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டதில் தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து ரம்யா மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். துணை நடிகை கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget