மேலும் அறிய

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்ல. இங்க டவர் இல்ல. உதவ யாரும் இல்ல. ஆனாலும் நீங்க உதவ வருவீங்கனு தெரியும் தோழா...

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் பல உயிர்களையும், தொற்று பரவலைத் தடுக்கப் போடப்பட்ட ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது. மலை உச்சிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் காலங்காலமாக வாழும் பழங்குடி மக்களையும் கொரோனா அச்சமும், ஊரடங்கும் முடக்கிப் போட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளும் இருக்காது. போக்குவரத்து முடங்கியுள்ளதால் வெளியே வந்து பொருட்களை வாங்கவும் முடியாது.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

பழங்குடியின மக்களுக்கு உதவ வேண்டிய அரசுத் துறைகள் கிட்டத்தட்ட அம்மக்களை கைவிட்டு விட்டது. பல பழங்குடி குடும்பங்களுக்கு ரேசன் அட்டையும் இல்லாததால், நிவாரண உதவிகளும் கிடைக்காத நிலை. இத்தகைய சூழலில் பழங்குடிகளின் வலிகளும், கண்ணீரும் மலைகளையும், மரங்களையும் தாண்டி வெளியே வருவதில்லை. கோவை மாவட்டம் ஆனைமலை மலைத் தொடரில் தொடர்ப்பு எல்லைக்கு அப்பால் வாழும் பழங்குடியின மக்களைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டி வருகிறார், பரமசிவம்.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

கரடு முரடான மலைப் பாதைகளிலும், வனவிலங்குகள் குறுக்கீடும் அடர்ந்த வனப்பகுதிகளிலும் சிரமங்களும், வலிகளும் நிரம்பிய நீண்ட பயணத்தின் மூலம் இந்த உதவிகளை பரமசிவம் தன்னார்வலர்களின் உதவியுடன் செய்து வருகிறார். அதுவும் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. ஊரடங்கு துவங்கியதில் இருந்து 25 நாட்களுக்கும் மேலாக நிவாரணப் பொருட்களையும், மருத்துவ உபகரணங்களையும் கைகளில் சுமந்தபடி, இவரது கால்கள் காடுகளுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது. மழை, பாதைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், வன விலங்குகள் குறுக்கீடு என பலத் தடைகளை தாண்டிச் சென்று உதவி வருகிறார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவராக உள்ள பரமசிவம், அவரது சங்கம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் இதனைச் செய்து வருகிறார்.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

 இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் பேசிய பரமசிவம், “ஊரடங்கு வருவதற்கு முன்பே பழங்குடி மக்கள் ஊரடங்கில் தான் இருந்து வருகின்றனர். கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு பழங்குடி மக்களை காடுகளுக்குள் முடக்கிப் போட்டுள்ளது. வனத்துறை மற்றும் வருவாய் துறை ஆகிய அரசுத் துறைகள் நேரடியாக எந்த உதவியையும் செய்யவில்லை. இதனிடையே மழை மற்றும் புயல் காரணமாக சின்னார்பதி கிராமத்தில் வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதமடைந்தன. பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் அம்மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

நாங்கள் தொடர்ந்து பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களின் உரிமைக்கான போராட்டங்களையும் செய்து வருகிறோம். இந்த ஊரடங்கின் போது பழங்குடிகளுக்கு உதவ எங்களுடன் பல தன்னார்வலர்கள் சேர்ந்தனர். குறிப்பாக அருண் பாலாஜி, பவுலினா, கோபி, சுரேஷ்குமார், பத்மினி உள்ளிட்டோர் பேருதவிகளை செய்துள்ளனர். ஊரடங்கு துவங்கியதில் இருந்து நாகர் கூற்று, காடாம்பாறை, கீழ் பூனாட்சி, கோழி கமுத்தி, எருமை பாறை உள்ளிட்ட  17 வனக்கிராமங்கள் மற்றும் 7 சமவெளிக் கிராமங்களில் உள்ள 1200 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு 13 ½ இலட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளோம்.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

எந்த வகையிலும் பழங்குடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால், பலர் உதவ முன்வந்தாலும் குறைந்த அளவிலான ஆட்கள் மட்டும் உதவச் சென்றோம். அதிலும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே அழைத்துச் சென்றோம். நிவாரண பொருட்களை கொண்டுச் செல்ல சில இடங்களில் அனுமதி பெற்று வர வேண்டுமென வனத்துறையினர் தடங்கல்களை செய்தனர். பல இடங்களில் வனத்துறையினர்  உதவி செய்தனர்.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

கரடு முரடான சாலைகளில் பல மணி நேர பயணம், பாதைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், வன விலங்குகள் குறுக்கீடு, கொட்டும் மழை, அட்டைப்பூச்சி கடிகளால் இரத்தம் சிந்துதல் எனப் பல்வேறு சிரமங்களை தாண்டி உதவிகளை செய்தோம். அப்போது ‘எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்ல. இங்க டவர் இல்ல. உதவ யாரும் இல்ல. ஆனாலும் நீங்க உதவ வருவீங்கனு தெரியும் தோழா...’ என பழங்குடிகள் தெரிவித்தனர். அந்த வார்த்தைகள் தான் அடுத்தடுத்த பணிகளுக்கும், பயணங்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது.

அடர் வனங்களுக்குள் நீண்ட பயணம்; பழங்குடிகளுக்கு உதவி வரும் பரமசிவம்

இதனை உங்களிடம் சொல்வது கூட விளம்பரம் தேடும் ஏற்பாடு அல்ல. மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டுமென்ற உந்துதலை தர வேண்டும் என்பதற்காக தான்’ எனத் தெரிவித்தார். தன்னலம் இல்லாமல் உதவும் தன்னார்வலர்களின் உதவிகள் போற்றுதலுக்கு உரியது.

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget