மேலும் அறிய

விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு ; காவல் துறையினர் விசாரணை

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி மோகனசுந்தரம் என்பவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சௌரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி மோகனசுந்தரம் என்பவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் விஜயம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அஸ்வினி என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியில் குணா மற்றும் இராமு என்ற இரு தொழிலாளர்களுடன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென விஷவாயு வெளியேறவே மோகனசுந்தரம் மற்றும் அவளுடன் வந்த குணா, ராமு என மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்த அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மூவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மோகனசுந்தரம் உயர்ந்தார்.  

மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இந்த பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே உயிரிழந்த மோகனசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் உரிய நிவாரண வழங்கப்பட வேண்டும் எனவும், அவரது மனைவிக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் எனவும் குடும்பத்தினரும், திராவிடத் தமிழர் கட்சி அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்திய அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர்  வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Embed widget