மேலும் அறிய

நிரம்பி வழியும் கோவை அரசு மருத்துவமனை ; ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்

ஜீரோ டிலே வார்டில் உள்ள 15 படுக்கைகளும் நிரம்பியதை அடுத்து, 10 பேருக்கு இருக்கையில் அமர வைத்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோயாளிகளின் வந்ததால் படுக்கை வசதியின்றி, அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருக்கும் நிலை இருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருப்பதை தவிர்க்க அமைக்கப்பட்ட ஜீரோ டீலே வார்டும் நிரம்பியதால், நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.

நிரம்பி வழியும் கோவை அரசு மருத்துவமனை ; ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேசமயம் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை

கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி மிகவும் அவசியமாக உள்ளது. இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அலைகழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆம்புலன்சில் நோயாளிகள்

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி ஆக்சிஜன் கிடைக்க வசதியாக கோவை அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய ‘ஜீரோ டிலே’ என்ற சிறப்பு வார்டு நேற்று அமைக்கப்பட்டது. இங்கு நோயாளிகளை பரிசோதித்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், சாதாரண படுக்கை தேவை உள்ள நோயாளிகள் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் என்ற கருவி மூலம், வெளிக்காற்றை உள்வாங்கி நைட்ரஜனை பிரித்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.  இதனால் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலையும், சிகிச்சையின்றி உயிரிழக்கும் நிலையும் தவிர்க்கப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் எதிர்பார்த்தனர்.

ஜீரோ டீலே வார்டு

கோவை அரசு மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் நிரம்பியது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா நோயாளிகள் ஜீரோ டிலே வார்டில் அனுமதிக்கப்பட்டனர். ஜீரோ டிலே வார்டில் உள்ள 15 படுக்கைகளும் நிரம்பியதை அடுத்து, 10 பேருக்கு இருக்கையில் அமர வைத்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோயாளிகளின் வந்ததால் படுக்கை வசதியின்றி, அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருக்கும் நிலை இருக்கிறது. 5 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருந்து வருகின்றனர்.

நிரம்பி வழியும் கோவை அரசு மருத்துவமனை ; ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்

ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கூடுதல் ஜீரோ டிலோ பகுதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget