மேலும் அறிய

கோவையில் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 52 க்கு உட்பட்ட பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ரூ. 1.28 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றார்.

பின்னர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடந்தது. விசைத்தறி நெசவாளர்களுக்கு  750 யூனிட் இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தியது, ஆயிரம் யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்க்கு உயர்த்தப்பட்ட கட்டணத்ததில் 70 பைசா குறைப்பு, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண்.52 பீளமேடு பி.எஸ்.ஜி ஹட்கோ காலனி பகுதியில் ரூ.1.28 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த போது.. pic.twitter.com/RT2PuHTid0

— V.Senthilbalaji (@V_Senthilbalaji) March 11, 2023

">

இதனைத்தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று பீளமேடு பகுதியில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வரும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் தயாநிதி மாறன் உறவினரும், மல்லிகை இராம்குமார் என்பவரின் தயாருமான மகாலட்சுமி (85) வயது கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மகாலட்சுமியின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.  

கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 52 க்கு உட்பட்ட பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ரூ. 1.28 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது போடப்பட்ட சாலையின் தரத்தையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகளின் போது அமைச்சர்கள் முத்துச்சாமி, காந்தி, செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பின்னர் கோவை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget