மேலும் அறிய

கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்

தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜூன் நான்காம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பீப்பில்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பின் சார்பில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் ஏராளமான பொதுமக்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழுக்கம் எழுப்பிய பீப்புல்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பினர், தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜூன் நான்காம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பீப்பிள்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பை ஏற்படுத்தி அவருக்காக வாக்கு சேகரித்து வந்ததாகவும், தாங்கள் வாக்கு சேகரித்த பொதுமக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள், வாக்காளர் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல்  அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி  மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ஆகியவை உள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.  வாக்குப்பதிவு துவங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனிடையே வாக்காளர்கள் பட்டியலில் ஒரு இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் பலர் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget