மேலும் அறிய

Annamalai: ‘நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தால் குடியரசுத் தலைவரிடம் முதல்வர் புகார்’ - அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக சொல்லுவதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது. இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்னென்ன சொன்னார்கள்? வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர். ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அந்த விஷயத்தை விவாதிக்க நேரம் இருக்கிறது.

அதே வேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்? செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகராக்கும் விதமாக அந்த கடிதம் அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள்  இருக்கும்பொழுது ஆளுநர்  மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. ஆளுநர் அப்படி படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தை சொல்லி இருக்க வேண்டும். எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கின்றார். திமுக சொல்லுவதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது. இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்னென்ன சொன்னார்கள்? வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது.

சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை என்று கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல் துறை சொல்வது தவறா? என்பது தான் விவாதமே தவிர ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்? ஆளுநருக்கு ஜி. யு. போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால் ஜி. யு. போப் குறித்து அவர் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். கலாச்சாரத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது. முதல்வர் எழுதிய  கடிதம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தைக் காட்டும் விதமாகவே, அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பி்ரதிபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget