மேலும் அறிய

'சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து, கேரள பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம்’ - அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், தடுப்பணையை அகற்ற கோரியும் போராட்டம் நடத்துவது குறித்தான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விசிக, தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும் போது, ”கோவையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணைக்கு வரும் நீரை கேரளா அரசு தடுப்மணை மூலம் தடுக்கிறது. தற்போது 50 அடி வரை கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் முழு கொள்ளளவிற்கு கேரளா அரசு விடுவதில்லை. 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி அளித்து வருகின்றனர். சிறுவாணி அணையின் பராமரிப்பை தமிழக அரசு செய்து வருகிறது. இருப்பினும் கோவை சாடிவயலில் இருந்து சிறுவாணி வரை வனப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் கேரளா அரசு இதுவரை சாலையை சீர் செய்யவில்லை. தற்போது தமிழக விவசாயிகள் எதிர்ப்பை மீறி சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கேரள அரசு கட்டி வருகிறது. இதனைக் கண்டித்து வரும் 26 ஆம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேரளா எல்லைகளில் போராட்டம் நடந்துவோம்” எனத் தெரிவித்தார்.


சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து, கேரள பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம்’ - அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன‌. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது.

அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது என அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக உள்ளதால், இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! தமிழகம் வரும் அமித்ஷா!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! தமிழகம் வரும் அமித்ஷா!
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Embed widget