மேலும் அறிய

"என் தகுதி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை" - ஆ.ராசா பதிலடி

”முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன்”

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வருகின்ற 11ம் தேதி பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அமைச்சர் முத்துசாமி, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற 11 ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பில்லூர் 3வது திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டது. இதனால் வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கும் நிலை இருக்கிறது. பில்லூர் 3  திட்டத்தை துவங்கினால் கோவை மக்களுக்கு  தினமும் தண்ணீர் கொடுக்க முடியும். கோவையில் உள்ள 22 லட்சம் மக்களுக்கும் 300 எம்.எல்.டி தண்ணீர் இருந்தால் தினமும் கொடுக்க முடியும். முதல்வர் உத்தரவின்படி இந்த திட்டத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொண்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், “தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும், மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.கவினர் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி வாழைப்பழக் கதை மாதிரி பேசுகின்றனர். எனக்கு என்ன தகுதி இருக்கின்றது என பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தை பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்திருக்க வேண்டும் என்று சொன்னால் அவரிடம் திரும்பி கேட்கின்றேன். உங்கள் கேபினட்டில் இருந்த ஒரு அமைச்சர், முதல்வர், கலைஞர், முதல்வரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்கு இருக்கின்றது. அதற்கு பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டு, பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன். எம்ஜிஆர் முகத்தை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறுவது குறித்த கேள்விக்கு, அது தனி கதை அதை தனியாக பேசுவோம். அதற்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக சூலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “நாளை மறுநாள் கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வியூகம் என்பது ரகசியமாக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளிக்க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை திருப்பூர், கோவைக்கு வருகிறார்கள். ஒன்றிய அரசிடம் எதை எல்லாம் வாங்க வேண்டும் என கேட்டறிய உள்ளனர். நாங்கள் கருத்து திணிக்கவில்லை. மக்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளதை கருத்து கணிப்பு காட்டுகிறது. அந்த அளவு முதலமைச்சர் உழைக்கிறார். மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்து கணிப்புகளாக வெளியிடப்படுகிறது. அத்திக்கடவு அவிநாசி பணிகள் முடிவடைந்த பிறகும் சில பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. தாமதம் ஏற்பட காரணமே நிலம் எடுக்க விவசாயிகள் ஒப்புதல் அளிக்காததது தான். விவசாயிகளிடம் பேசிய நிலம் பெற்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget