மேலும் அறிய

கோவை : ஸ்கேன் செய்தபோது அதிர்ச்சி : விமான நிலையத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

உடைமைகளை ஸ்கேன் செய்தபோது, அவர் கொண்டு வந்த பையில் 92 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

கோவை விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் இருந்து 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் இன்று மாலை தொழில் நிமித்தமாக சென்னை செல்வதற்காக திருப்பூரில் இருந்து கோவை விமானம் நிலையத்திற்கு வந்தார். இண்டிகோ விமானம் மூலம் சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது சசிகுமார் கொண்டு வந்த உடைமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உடமைகளை ஸ்கேன் செய்தபோது, அவர் கொண்டு வந்த பையில்  92 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும், பீளமேடு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்ட போது, முறையாக அனுமதி பெற்று துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் கவனக்குறைவாக மறந்து உடைமைகளுடன் துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் தொழிலதிபர்  சசிகுமாரையும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்  பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் துப்பாக்கி குண்டுகள் எடுத்து வரப்பட்டது குறித்து சசிகுமாரிடம் பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓரே நேரத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது, கோவை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : ஸ்கேன் செய்தபோது அதிர்ச்சி : விமான நிலையத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்வப்போது பயணிகளிடம் துப்பாக்கிகள், குண்டுகள், கடத்தல் தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவது உண்டு. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget