மேலும் அறிய

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.1500 கோடி ஊழல் குற்றச்சாட்டு; கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார்!

எஸ்.பி.வேலுமணி கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, முன்னாள் அதிமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்பவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என அழைக்கப்படும் இவர் சிறுவாணி என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அதிமுக நிர்வாகியாக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி  சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கோவையில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக செயல்பட்டதாக கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் மனு அளித்துள்ளார். அதில், "கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் லஞ்ச லாவண்யங்கள் நடைபெற்று பொதுமக்களின் வரிப்பணத்தை  லட்சக்கணக்காவும், கோடிகளை தாண்டியும் மாஜி மந்திரி வேலுமணி மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்து விட்டனர்.  அத்திகடவு - அவிநாசி திட்டம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், நொய்யல் புனரமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், உக்கடம் மேம்பால பணிகள், பந்தயசாலை ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டம், சூயஸ் குடிநீர் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகள், சாலை மற்றும் சாக்கடை பணிகள் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது. அனைத்து கோவை மாநகராட்சி பணிகளிலும் 12 சதவீதம் கமிசனாக பெற்றுள்ளார். அதிகப்படியாக கொள்ளையடித்த மாஜி அமைச்சர் வேலுமணி மீது சடடப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.1500 கோடி ஊழல் குற்றச்சாட்டு; கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார்!      

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத், "கோவை மாநகரில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்துள்ளார். சில மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் ஒவ்வொரு திட்டங்களுக்கு 12 சதவீத கமிஷன் பெற்றுள்ளார். இதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் அழகுபடுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. அதேபோல மற்ற பணிகள் எதுவும் முழுமையாக முடிக்கப்படவில்லை. மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது. 1500 கோடி ரூபாய்க்கும் மேல் பொது மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சடடப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Breaking News LIVE: சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்
Breaking News LIVE: சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்
Vidaamuyarchi:
Vidaamuyarchi: "இந்த பொங்கல் விடாமுயற்சிதான்" டப்பிங்கை முடித்த அஜித்! குஷியில் ரசிகர்கள்!
Embed widget