மேலும் அறிய

ட்ரோன் தாக்குதல் பயம்... 3 நாட்கள் துபாயில் சிக்கிய கோவை குடும்பங்கள்...

துபாயில் சிக்கிய கோவை மக்களை இந்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்பு.

கோவை: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக துபாயில் சிக்கியிருந்த கோவையை சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் இந்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக கோவை திரும்பினர்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, சுற்றுலா நோக்கில் மூன்று குடும்பங்களை சேர்ந்த நாங்கள் துபாய் சென்றிருந்தோம். சுற்றுலாவை முடித்துவிட்டு கோவை திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்ற போது, விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக தகவல் கிடைத்தது. இதன் காரணமாக விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல், மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பச் செல்லப்பட்டது.

துபாயில் சிக்கிய கோவை மக்கள் சொன்ன அதிர்ச்சி

இதனால் மூன்று நாட்கள் துபாயில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாட்களில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் கிடைத்ததால் சிரமம் ஏற்பட்டது. பின்னர் நண்பர்கள் மூலம் இந்தியாவில் உள்ள தொடர்புகளை அணுகி, அவர்களின் உதவியுடன் வெளிநாட்டு இந்தியர்கள் (NRI) மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணம் மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறினர். அபுதாபி விமான நிலையத்தில் இமிகிரேஷன் கடந்தவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு அவ்வாறு வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், அபுதாபி அரசு அனைவரையும் முழுமையாக கவனித்துக் கொண்டதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முழுமையான உண்மை அல்ல என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களிலும் மிகைப்படுத்தல்கள் உள்ளன என்றும் அவர்கள் கூறினர்.

துபாயில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலையின் வீடியோ காட்சிகளையும் அவர்கள் செய்தியாளர்களுக்கு காட்டி பகிர்ந்தனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
Ertiga on EMI: சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
Embed widget