கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் - மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதல்வர் பழனிசாமி, அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 11 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இந்நிலையில், சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வருக்கு இன்று இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் தினசரி சுமார் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 34.87 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்டவை போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.





















