மேலும் அறிய
Advertisement
ATM கார்டுகளை திருடி நூதன அபேஸ்: கில்லாடி இளைஞரை கைது செய்த கொரட்டூர் தனிப்படை!
கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட 2 வெவ்வேறு புகாரில் ஒரே குற்றவாளி கைது.
NFC ,WIFI enable ATM கார்டுகளை மட்டும் திருடி நூதன முறையில் மெகா திருட்டில் ஈடுபட்ட கில்லாடி இளைஞர் கொரட்டூர் தனிப்படை போலீசாரால் கைது.
கைது செய்யப்பட்ட சுரேஷிடமிருந்து 18 திருட்டு ATM கார்டும் ரூபாய் 4000 த்தையும் பறிமுதல் செய்துள்ளனர் கொரட்டூர் காவல் துறையினர்.கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட 2 வெவ்வேறு புகாரில் ஒரே குற்றவாளி கைது.
சரவணன் (வயது 35) இவர் கொரட்டூரில் டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 14 ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ATM - ல் தன்னுடைய WIFI enable ATM கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.
பின்னர், மறுநாள் அவரது கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் துணிக்கடை, உணவகம், மதுக்கடையிலிருந்து WIFI ATM கார்டை பயன்படுத்தி ரூ.3,500/- பணம் பரிவர்த்தனை செய்ததாக தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தனது ஏடிஎம் கார்டை சோதனை செய்த போது தொலைந்து போனது தெரியவந்தது. இதையடுத்து சரவணன். இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது கொரட்டூரை சேர்ந்த சுரேஷ்,31 என்பவர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர் 18 க்கும் மேற்பட்ட WIFI கார்டுகளை திருடி, அதன் மூலம் ஏராளமானவர்களின் பணத்தை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் ஆவடியையடுத்த திருமுல்லைவாயல், ஜெயலட்சுமி நகரை சார்ந்த தீபா (23) என்பவரது தொலைந்து போன WIFI ATM கார்டையும் பயன்படுத்தி கடந்த வாரம் ரூ 89 ஆயிரம் பணத்தையும் பரிவர்த்தனை செய்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் படி 18 WIFI ATM கார்டு மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கபணம், 1 இரு சக்கர வாகனம் , 1 செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸார் சுரேஷ் மீது ஆள்மாறாட்டம் செய்தல், பாதுகாக்கப்பட்ட பொருளை திருடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பலே கில்லாடி திருடனை, போலீசார் சாமர்த்தியாக கைது செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion