ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்
செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சை மாணவி தற்கொலை - மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் தனித்தனியாக வாக்குமூலம்
பின்பு இதனையடுத்து வாந்தி எடுத்துள்ளார்.உடனே அவரது அண்ணன் அவரை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். சிக்கன் சாப்பிட்ட நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர். இதனால் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.