அவசரமா போறேன்: மது போதையில் போலீசாருடன் வாக்கு வாதம் செய்த இளைஞர்! அடுத்து என்ன?
சென்னையில் வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய இளைஞர் காவல் துறையை ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னையில் வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய இளைஞர் காவல் துறையை ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது , இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கி சோதனை செய்ததில் அந்த நபர் மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் அந்த நபருக்கு அபராதம் விதிக்க முற்பட்டபோது காவல்துறையிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் கொருக்குப்பேட்டை சட்ட ஒழுங்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரிக்க முற்பட்டபோது காவல் உதவி ஆய்வாளரையும் அந்த இளைஞர் ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக அந்த இளைஞர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்த 26 வயது சுரேஸ் என்பதும் பெரம்பூரில் இருக்கும் தனது மனைவி வீட்டிற்கு மது போதையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரிடம் பிடிபட்டதும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினரின் வாகன சோதனையில் பிரதான சாலையில் மது போதையில் இளைஞர் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குப்பை கொட்ட வந்த முதியவரை ஓடி வந்து முட்டிய மாடு
சென்னை கொருக்குப்பேட்டை காந்தி நகரை சேர்ந்த சேகர் (60) இவர் தனது வீட்டில் இருந்த குப்பைகளை எடுத்து மெயின் ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் போடுவதற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது ஓடி வந்த மாடு ஒன்று சேகரை மூட்டி தூக்கி வீசியது. இதில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார் இதனை அருகில் இருந்தவர்களை சேகரை மீட்டு ஆட்டோவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேகருக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்பாக ஆர்.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மாடுகளுக்கு லைசென்ஸ் பெறுவது கட்டாயம் போன்ற விதி முறைகளை விதிக்கிறது. இது போன்ற விதிமுறைகளை விதித்தாலும் மாட்டு உரிமையாளர்கள் எவ்வாறு பின்பற்றுவார்கள் மேலும் இது போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணங்களாக உள்ளது.