மேலும் அறிய

செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து 3 மணிக்கு தண்ணீர் திறப்பு - எவ்வளவு கனஅடி தெரியுமா..?

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஆகிய ஏரிகளில் இருந்து 100 கனஅடி நீர் 3 மணிக்கு திறக்கப்படுகிறது

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிட்டப்பட்ட நீரால் சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் குறித்து காணலாம்.
 
செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து 3 மணிக்கு தண்ணீர் திறப்பு - எவ்வளவு கனஅடி தெரியுமா..?
 
செம்பரம்பாக்கம் இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர் வரத்தானது 1180 கனடியாக உள்ளது. நீர் வெளியேற்றுமானது 150 கன வழியாக இருக்கிறது ( மெட்ரோ குடிநீருக்கு 108 கன அடி, சிப்காடுக்கு 3 கன அடி, நீர்ப்பாசனத்துக்கு 5 கன அடி) 24 அடி கொள்ளளவில்  20. 64 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. சுமார் 2.7 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது.
 
3 மணிக்கு திறக்கப்படும் ஏரி
 
தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்து ஆனது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓட துவங்கி உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 100 கனஅடி நீரை இன்று மதியம் மூன்று மணிக்கு திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன் அடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
புழல் ஏரியில் நீர் திறப்பு
 
சென்னை பெருநகர மக்களுக்கு மற்றொரு குடிநீர் ஆதாரமாக இருக்கும் புழல் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கன வந்து கொண்டிருப்பதால், புழல் ஏரியின் மொத்த கொள்ளளவ 3300 கன அடியில் தற்போது 2692 கன அடி நீர் இருப்பு உள்ளது.
 
செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து 3 மணிக்கு தண்ணீர் திறப்பு - எவ்வளவு கனஅடி தெரியுமா..?
 
இதன் காரணமாக புழல் ஏரியில் இருந்தும்,  மதியம் 3 மணியளவில் புழல் ஏரியிலிருந்து, வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
வடகிழக்கு பருவ மழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget