மேலும் அறிய
Advertisement
வாலாஜாபாத் அருகே மறைமுகத் தேர்தல் நடத்த சென்ற உதவி தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
’’தேர்தல் அலுவலரான ஹரி உடன் பிரபாகரன் என்பவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்து ஹரி உயிரிழந்தார்’’
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வயதுக்குட்பட்ட தாங்கி ஊராட்சியில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தாங்கி ஊராட்சிக்கு துணை தலைவர் தேர்ந்தெடுக்கும் பணியில் தேர்தல்அலுவலராக ஹரி என்பவர் ஈடுபட்டிருந்தார். தாங்கி ஊராட்சியில் மொத்தம் 6 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இந்நிலையில், 6 வார்டு உறுப்பினர்களும் ஒரு அறையில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
அச்சமயத்தில் தலைவர் தேர்தலில் நின்ற பிரபாகரன் என்பவர் தோல்வி அடைந்ததால் துணை தலைவருக்காக தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு ரகசிய அறையின் ஜன்னல் பகுதியில், இருந்து வாக்கு கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இதனை அடுத்து தேர்தல் அலுவலரான ஹரி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதிக்கு புறம்பானது என கூறியுள்ளார். இருந்தும் தொடர்ந்து பிரபாகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, ஹரி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அவர் முதலுதவி சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலேயே உயிர் பிரிந்தது. இதுகுறித்து ஊர்மக்கள் தெரிவிக்கையில், ஹரியிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால்தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்து இருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைமுக தேர்தல்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஊராட்சி பிரதிநிதிகள், இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தொடங்கியவுடன் உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும் என்றும், பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருந்தால் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion