மேலும் அறிய
Advertisement
தொடர்ந்து போராடும் ஃபோர்டு ஊழியர்கள்! நேரில் சந்தித்த திருமாவளவன்!
ஃபோர்டு ஊழியர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
சென்னை மறைமலை நகரில் செயல்பட்டு வரும் ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது வேலையை உறுதி செய்ய வேண்டும் என கூறி கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை தமிழக அரசு சார்பில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இருந்தும் ஊழியர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறுகையில் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் பேசுகையில், ஃபோர்டு தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வரை, விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதரவு உண்டு. கட்சிக்கு ஒற்றை தலைமை அவசியமானது. இரண்டு தலைமை என்பது கட்சியின் வளர்ச்சிக்கு ஏதுவானதல்ல. அதிமுக ஒற்றை தலைமை நோக்கி நகர்வது ஒருவகையில் வரவேற்கத்தக்கது, அந்த வகையில் வரவேற்கிறேன். ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் யார் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம்.
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோ எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்நிலையில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படுகிறதா, என உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, சென்னை தொழிற்சாலையில் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion