மேலும் அறிய
Advertisement
கொரோனா நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம்
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன் கொரோனா நோயாளிகள் இருவர் தர்ணாப் போராட்டம், அரசு மருத்துவனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127. இதுவரை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 904. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 1080 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி இருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு ,கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை, மேலும் வார்டுகள் முறையான பராமரிப்பு இல்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் உள்ள மாவட்ட ஆட்சியர் அறையின் முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பரபரப்பு பற்றிக் கொண்டது. உடனடியாக இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஒருநாள் நோயாளிகள் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது கணவன் மனைவி இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து விதமான அடிப்படை தேவைகளும் மருத்துவமனையில் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின், அருகே இருந்த படுக்கையில் இன்று காலை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். அதனால் பயம் ஏற்பட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion