உணவின்றி தவிப்போருக்கு சேவையாற்றும் இளைஞர்கள்!
திருவண்ணாமலையில் ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேடி போய் உணவு பொட்டலங்களை வழங்கும் பணிகள் இளைஞர் குழு ஒன்று ஈடுபட்டு வருகிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். கோவிலின் பின்புறம் ஈசனே மலையாக காட்சி தருகிறார். மலையைச் சுற்றி14 கிலோமீட்டர் கிரிவல பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் சாதுக்கள் அதிக அளவில் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக அர்பனித்து வீடு, குடும்பம்,இன்பம் , துன்பம் எல்லாவற்றையும் துறந்து சிவனே கதியாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் உள்ளனர்.
கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பல தனியார் தொன்டு நிறுவனங்கள் இவர்களுக்கு அன்னதானம் அளித்து வந்தனர் . தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதிகரித்து மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மக்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பல தொன்டு நிறுவனஙகள் ஊரடங்கால் மூடப்பட்டது.இதனால் கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் சாதுக்களுக்கு உணவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் சாதுக்களுக்கு உணவு பற்றாக்குறையாக உளளது. கிரிவல பாதையில் பல வருடங்களாக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சாதுகளுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.இவர்களிடம் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த 5 இளைஞர்கள் உணவுகள் வாங்கி உணவுயின்றி சாலை ஓரத்தில் தவித்து வரும் சாதுக்கள் மற்றும் பொது மக்களுக்கு தேடிபோய் உணவு அளித்து வருகிறார்கள்.
இளைஞர்களிடம் பேசுகையில், ‛நாங்கள் திருவண்ணாமலையை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான கார்த்திக் , கிஷோர், மோகன்,சூரியா, முருகன் என்ற ஐந்து நண்பர்களும் இணைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக ரத்ததானம் செய்து வந்தோம். அப்போது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய யாரும் வராததால் தன்னார்வலர்கள் மூலமாக செய்யலாம் என்று முடிவெடுத்தோம் ஆனால் அதில் இருவர் வரவில்லை. பின்னர் நாங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம். ஊரடங்கு நேரத்தில் உணவின்றி சாலை ஓரத்தில் மற்றும் சாதுக்கள் உணவின்றி உள்ளனர் இவர்களுக்கு உணவு பொட்டலங்களை தயார் செய்து கொடுத்து வந்தோம். எங்களால் இரண்டு நாட்கள் வரை தான் கொடுக்க முடிந்தது. ஏன் என்றால் எங்களிடம் இருந்த பணம் போதவில்லை.
அப்போது யோசனை செய்து கிரிவலப்பாதையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்திடம் நாங்கள் செய்யும் சேவையை கூறி உதவி கேட்டோம். அவர்கள் ஒப்புதல் அளித்து தினந்தோறும் எங்களிடத்தில் உணவு பொட்டலங்களை தயாரித்து தேவையான அளவு நீங்கள் எடுத்து செல்லுங்கள் என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து நாங்கள் கிரிவலபாதையில் உள்ள சாதுக்களுக்கு சாலை ஓரத்தில் உணவு யின்றி தவித்து வரும் பொதுமக்களுக்கு, மற்றும் மருத்துவ மனைகளுக்கு உணவு பொட்டலங்களை கொடுத்து ஊரடங்கு காலங்களில் சேவையாற்றி வருகிறோம்,’ என தெரிவித்தனர்.