மேலும் அறிய

TN Rain Alert: அடுத்து எத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்கும்? - வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை

சென்னையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் சென்னை  உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

pic.twitter.com/izTqiFg24X

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 4, 2025

">

நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் காலை மழை பெய்யாத நிலையில் சுமார் 11 மணி அளவில் மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அடுத்த ஏழு தினங்கள் வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்கிழக்கு சுற்றும் அதனை ஒட்டிய வட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (03-12-2025) வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

04-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06-12-2025 முதல் 10-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (04-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (05-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய வேசான / மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல் பகுதிகள்:

04-12-2025: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55கிலோ மீட்டர் வேசுத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

05-12-2025 முதல் 08-12-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை

தமிழக கடலோரப்பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகள்:

04-12-2025 முதல் 08-12-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death
OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
Embed widget