TN Weather: குளு குளு சென்னை - சில்லென்ற வானிலை, 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
TN Weather: தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

TN Weather: தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மழை:
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. அதன்படி, இன்றும் அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வடப்ழனி, கோடம்பாக்கம், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ண்ணாசாலை ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே லேசானது முதல் மிதமானது மழை பதிவாகியுள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால், வெயிலின் தாக்கம் இன்றி மக்கள் நிம்மதியாக உறங்க முடிந்தது. இதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வானிலை மையம் எச்சரிக்கை:
மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் நாளை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும். தென்மேற்கு பருவ மழை தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு, குமரிக்கடல், தெற்கு வங்க கடல் கடல் பகுதிகளின் மேலும் சில பகுதிகளு பரவியுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் மாலத்தீவு, குமரிக்கடலின் ஏனைய பகுதிகள் தெற்கு அரபிக்கடல், வங்க கடல் பகுதிகளில் மேலும் சில பகுதிகளுக்கு பரவக்கூடும்.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு:
அந்த வகையில் இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-05-2025 முதல் 23-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை:
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20-05-2025 முதல் 23-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17 மாவட்டங்களில் மழை:
இன்று காலை மண்டல வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் விருதுநகரில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்” என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.





















