மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Special Buses: மக்களே ஹேப்பி நியூஸ்...வார இறுதி நாட்களில் 150 சிறப்பு பேருந்துகள் - காஞ்சி மண்டலம் அதிரடி
Kanchipuram Bus: வார இறுதி நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .
வார இறுதி நாட்களில் பயணிகள் எண்ணிக்கைஅதிகமாக உள்ளதால் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவிப்பு.
சிறப்பு பேருந்துகள்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி சனி, ஞாயிறு கிழமைகளில் பேருந்துகளில் திருச்சி விழுப்புரம் பாண்டிச்சேரி திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
எந்தெந்த இடத்திற்கு இயக்கப்படுகிறது ? ( kanchipuram weekend bus )
அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, விழுப்புரம், பகுதிகளுக்கு 40 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 150 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் சிறப்பு பேருந்து வசதிகளை பயன்படுத்தி சென்று வரலாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
சிறப்பு பேருந்து தேவை என்ன ?
சென்னை புறநகர் பகுதிகள் அதிதீவிர வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட தேவைக்காக வட தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்களும், அதேபோன்ற தென் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதன் காரணமாக வார இறுதி நாட்களில், அதிக அளவு பொதுமக்கள் பேருந்தை நம்பி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முன்வந்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து துறைக்கு வருவாய் அதிகரிப்பது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு பெரும் பயன் தரும் எனவும் கருதப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion