மேலும் அறிய

Ambedkar Law University: 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேதி நீட்டிப்பு.. கடைசித் தேதி என்ன?

3 ஆண்டு கால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

’’தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியானது.

தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப் பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 05.08.2022 முதல்‌ மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதற்கு, 30.08.2022 வரை பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்னென்ன படிப்புகள்?

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக, 3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்பு மற்றும் 3 ஆண்டு எல்எல்பி பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆன்லைன் வழியாக மாணவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார். 

Ambedkar Law University: 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேதி நீட்டிப்பு.. கடைசித் தேதி என்ன?

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in/ 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget